Wednesday, January 25, 2017

ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல்


ஆநிரை மீட்டல் ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல் 

ஆ என்பது தமிழில் பசுவினங்களை குறிக்கும். (ஆவின் பால் என்பது பசுவின் பால் என்று பொருள் )

பசுவை சார்ந்து நின்ற இடங்களுக்கு ஆவினன்குடி (திருவாவினன்குடி - பழனி ), ஆவடுதுரை (திருவாவடுதுறை) என்ற பெயர்கள் உண்டு. 

ஆநிரை கவர்தல் என்பது போர் காலத்தில் எதிரி நாட்டு மன்னன் உள் புகுந்து நம்நாட்டு காளைகளையும், பசுவினங்களையும் கைப்பற்றுதல் ஆகும். அதனை வெற்றி கொண்டு மீட்டலே ஆநிரை மீட்டல் என இலக்கியம் பறை சாற்றுகிறது.

கலியுகத்தில் நேரிடையான எதிரிகள் மிகவும் குறைவு . பெரும்பாலும் சூட்சும எதிரியாகவும், நல்லது செய்வது போலவே தீமை செய்யும் அனுகூல சத்ருவாகவும் உள்ளனர். ஒரு நாட்டின் காவலனாக கீழே உள்ள திருக்குறள் நமக்கு கடமையை உணர்த்துகிறது

ஆபயன் குன்றும் ஆறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்

காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், 
ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், 
அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் (சான்றோர்களும் -நல்லோரும்) நூல்களை மறந்துவிடுவர். 
(அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.)

பசுவினத்தை செல்வம் என்று அய்யன் திருவள்ளுவர் மேலும் கூறுகிறார். இப்போது நடந்த அறப்போராட்டம் ஆநிரை மீட்டலின் முதல் மற்றும் பெரும் அத்தியாயம். இனி அதனை காத்தலும் போற்றலும் மிக முக்கிய கடன். காளைகளும், காராம்பசுக்களும் மகாலட்சுமியின் அம்சமாக இந்தியாவை தாண்டி உலக வரலாற்றில் நிற்கிறது. ஆயர்களாய் யேசுநாதரும், மோசஸ் ஆகியவர்களும் இதற்கு அடையாளமாக ஆநிரைகளுடன் வாழந்து  ஞானம் என்னும் செல்வதை கைவர பெற்றவ்ர்கள்

ஆநிரை, மண், கோட்டை ஆகிய மூன்றே கவர்தலுக்கு உட்படுவது

அடுத்து மீட்டு எடுக்கவேண்டியது நமது மண்ணை !

உரத்திலிருந்து ....
மரபணு மாற்ற படும் செயல்முறைகளிருந்து ...
ரசாயன பூச்சி கொல்லிகளில் இருந்து

தமிழனுடைய சத்துடைய பானமானது பருத்திப்பால் என்பது. இது பஞ்சு நூலாடை தயாரிக்கும் பருத்தி\செடியிலிருந்து வரும் விதைகளிலிருந்து தயாரிக்க  படும் உயர்ந்த ரக அமுதமாக கருதப்படுகிறது. தற்காலத்தில் காபியும், சோடாக்களும் பெருகி நிற்கும் காலத்தில், உடலுக்கு புஷ்டி தரும் பண்டைய பானத்தை மறந்தோம். இதன் நிலையை பாருங்கள் இப்போது!. எவ்வாறு சிலரால் இந்த இயற்கையான விதைகள் குறைந்து வருகிறது என்று கீழே உள்ள இணையதள லிங்க் வழியாக பாருங்கள்.

http://www.cban.ca/Resources/Topics/GE-Crops-and-Foods-On-the-Market/Cotton/Genetically-Modified-Cotton-CBAN-Factsheet


விதைகள், நம் நாட்டு தானியங்கள் , மூலிகைகள் இதனை மீட்டு எடுப்பதோடு அதன் அந்நியர்கள்  காப்புரிமை பெறாமல் காத்து உலகத்தில் நல்லாருக்கும், எளியோர்க்கும் கொடுப்பதே அடுத்து ...அதுவே மண் மீட்டல்.The GM Crops world do not understand the food, medicines and crops are interconnected. For instance a great medicine is Paruthi Paal (That is made out of cotton seeds). Firstly we started messing from outside using pesticides and now we are engineering a product that is not completed understood which is created in Nature. Controlling Global Food Chain, Seed Business and Taking Control at the cost of human life. Seem to me like a Killer chain that will start from the farmer to the one who produces it. For those who are not aware of what is happening in the world following is what it is .."Genetically modified crops (GMCs, GM crops, or biotech crops) are plants used in agriculture, the DNA of which has been modified using genetic engineering techniques. In most cases, the aim is to introduce a new trait to the plant which does not occur naturally in the species."
It is time we retrieve Seeds, Grains and Rich Herbs and ensure they are not patented by any foreign bodies. This helps ensure saving the Ecology of Earth, Retaining Richness thereby providing True Accessibility and Availability for True Crops to the needy of the world
-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போரைத் துவக்குவது எப்படி? ரிக்வேதத்திலும் மஹாபாரதத்திலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஒரே முறையைத் தான் பாடி இருக்கிறார்கள். எல்லை கடந்து போய் மாடு திருடுங்கள், மோதல் வரும்— இதுதான் ரிக் வேத காலத்திலிருந்து சேர சோழ பாண்டிய மன்னர் வரை கையாண்ட உத்தி. இமயம் முதல் குமரி வரை ஒரே உத்தி. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்குப் பின்பற்றப்பட்ட உத்தி. ரிக்வேதத்திலும் சங்கத் தமிழ் பாடல்களிலும், பாகவதத்திலும், மஹா பாரதத்திலும் ‘’ஆநிரை கவர்தல்’’ உள்ளது

(Ref : Tamil&Veda ) 

ஆநிரை, மண், கோட்டை ஆகிய மூன்றே கவர்தலுக்கு உட்படுவது.  அதனை எதிர்ப்பதையே வெவ்வேறு திணைகளில் தொல்கப்பியர் விளக்குகிறார். மேலும் இதனை அறிய ..


----------------------------------------------------------------------------------------------------------------------


Saturday, January 21, 2017

அறப்போராட்டம் - ரௌத்திரம் பழகுதமிழன் என்பவனின் அடையாளத்தை சிலகாலம் தன்னலம் கொண்ட தலைவர்கள்  தொலைத்து விட்டபோதும்,  மாணவர்கள் வழியாக காளைகளின் ஜல்லிக்கட்டு மூலமாக.. இந்த அடையாளம்  மீண்டும் வெளிப்படுகிறது, தொடர்ந்து வெளிப்படும்.

தமிழன் என்பவனின் வரையறை என்ன?

தமிழன் என்பவன் மதங்களை கடந்து இயற்கையின் வழி நிற்பவன். மதங்களை தாண்டி இந்த பூமியில் மானுடம் உயர்ந்து நெறியையும் அறத்தையும்  சார்ந்து வாழ  என்றும் மறையாத திருக்குறளை தந்தவன். அறத்தின் வழி என்றும் பொய்யாமொழி தந்து மனிதத்தின் மேம்பாட்டிற்கு சங்கம் நடத்திய ஞானத்தின் பேரினம் இதுவே. 

உழவை வந்தனம் செய்து விவசாயத்தை மேம்படுத்தி வல்லபம் செய்த சுந்தரானந்தர் சித்தன் முதல் நிகழ் காலத்தில் வாழந்த நம்மாழ்வார் வரை இயற்கை விவசாயத்தை உலகிற்கு அடையாளம் காட்டும் இனம்,
நவபாஷாணம் செய்த ரசவாத தலைவன் போகர் பெருமான் முதல் நிகழ் காலம் வரை வாழந்த அணு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதி ஆனா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லா பாமர வாழ்க்கை கொண்ட அப்துல்கலாமும் வந்த புண்ணிய பூமி இது . அவ்வை தாய் அரசர்களிடம் தூதாய் சென்று போரை நிறுத்தி பெண்மையின் உரிமையை ஞானத்திலும், இலக்கயத்திலும், தமிழ் புலமையிலும் பதிவு செய்தவர். பசி தீர்க்க உணவு தந்த வள்ளல் பெருமான் வைத்த அணையா அடுப்பினை தாங்கி நிற்கும் அக்னி பூமியே இது.
வடக்கிலிருந்து வந்து காளைகளை மேய்க்க தன உடலையும் மாற்றி திருமூலன் அய்யன் உரைத்தது "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யும் மாறே". இவ்வாறு இறைவன் முதல் இயற்க்கை வரை உள்ள அனைத்தையும் சித்த மருத்துவத்தையும், மணி மந்திர, அவுடதமும் தந்தது இந்த பூமியே 


இயற்கைக்கு எதிரான அடக்கு முறை எவ்வழியாக வந்தாலும் அதனை எதிர்த்து ரௌத்திரம் பழகும் இனமே தமிழ் இனம். இயற்கையக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் தன் உரிமை பறிபோனது போல உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்காக போராடுபவன். தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த வறுமையை சாடும் பாரதி தான் இந்த இனத்தின் அடையாளம். உலகத்தின் அணைத்து தேவர்களின் "போரின் சேனாதிபதியான" முருகப்பெருமானை தமிழ் கடவுளாக கொண்டு பல்லாயிர வருடங்களாக வீரத்தையும் தாண்டி கம்பீரமாக வாழும் இனம். 

சித்திகர்களின் இனமாக, மொழியாக, இயற்கையுடன் ஒத்து வாழந்து இந்த பூவுலகத்திற்கு வாழ்க்கை நெறியும், சித்தர்கள் நீதி வழங்கும் உன்னதமான இனமே தமிழ் இனம்,நந்திதேவர் பெருமானின் அகோர வெளிப்பாடே இன்றைய இளைஞர்கள் அறப்போராட்டம்.  இது ஆரம்பமே. இந்த இனம் தொடர்ந்து மரபணு மாற்றப்பட்ட விதைகள், விவசாயிகள் எதிரான கொடுமைகளை உலகத்தின் சார்பாக தொடர்ந்து அறவழியில் போராடி உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழும். 
இயற்கையை சார்ந்து வாழ்பவனே நற்தமிழனின் அடையாலம். அவன் பூவுலகில் மற்றவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பத்திற்கு இலக்கணம். அவன் என்றும் சன்மார்க்க  நெறியின் அடையாளம்